"காதலன் யார் என்று சொல்லுவேன்... அதுவரைக்கும் அதைச் செய்ங்க..." கீர்த்தி சுரேஷின் கடுப்பு போஸ்ட்.?

"காதலன் யார் என்று சொல்லுவேன்... அதுவரைக்கும் அதைச் செய்ங்க..." கீர்த்தி சுரேஷின் கடுப்பு போஸ்ட்.?


when-the-right-time-comes-i-willl-declare-my-lover-keer

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து  இன்று முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படம்  விரைவில் வெளியாக இருக்கிறது.

keethisureshகடந்த மார்ச் மாதம் இவரது நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காதல் சர்ச்சைகளில் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி சிக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. தளபதி விஜயுடன் இவர் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு துபாயை சார்ந்த தொழிலதிபர் ஃபர்கான் பின் லியாகத் என்பவர் உடன்  கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இந்தப் புகைப்படங்களை வைத்து இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என செய்திகள் பரவத் தொடங்கின. தற்போது இந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

keethisureshஇது பற்றி பேசி இருக்கும் அவர்  இந்த விஷயத்தில் என் நண்பரை தேவையில்லாமல் இழுக்காதீர்கள் என கூறியுள்ளார். மேலும் சரியான நேரம் வரும்போது என்னுடைய காதலர் யார் என்று நானே அறிவிப்பேன் எனவும்  தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதன் மூலம் கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டிருக்கிறது.