தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
நடிகை சமந்தா பூடான் சென்றதற்கு காரணம் இதுதானா.?
நடிகை சமந்தா சகுந்தவம், யசோதா போன்ற திரைப்படங்களுக்கு பின் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற திரைப்படத்தில் நடித்தார்.சிவா நிர்வாணா இயக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதோடு மிகப் பெரிய வெற்றியையும் இந்த படம் பெற்றது.
சென்ற சில மாதங்களாக ஒருவித தசை பிடிப்பு நோயின் காரணமாக, சமந்தா அவதியுற்று வருகிறார் என கூறப்படுகிறது. ஆகவே அவர் தற்சமயம் பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்காக அவர் தற்போது சூடானில் தங்கியிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறதாம்.
மேலும் சமந்தா ஒரு வெப் சீரிசிலும் நடித்து வருவதாக தெரிகிறது. அத்துடன் சமந்தா சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஷ்ணுவர்தன் இயக்கும் ஒரு திரைப்படத்தில் சமந்தா கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு ஒரு வருட காலத்திற்கு திரையுலகிலிருந்து விலகி ஒரு மிகப்பெரிய ஓய்வை மேற்கொள்ளப் போகிறார் சமந்தா என்றும் கூறப்படுகிறது. புதிதாக கமிட்டாகும் திரைப்படங்கள், படப்பிடிப்பு லெவெலில் இருக்கின்ற திரைப்படங்களை தவிர்த்து, மற்ற திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.