சினிமா

இடுப்பில் சேலை மடிப்பை சொருகியப்படி வி.ஜே ரம்யா! ஷாக் ஆன ரசிகர்கள்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

தொகுப்பாளினி ரம்யாவின் சங்கதலைவன் படத்தில் அவரது கிராமத்து பெண் லுக் புகைப்படம் ஒன்று இணைய

தொகுப்பாளினி ரம்யாவின் சங்கதலைவன் படத்தில் அவரது கிராமத்து பெண் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா. விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து தமிழில் ஓகே கண்மணி, வனமகன் உள்ளிட்ட  சிறுசிறு வேடத்தில் நடித்து வந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். சில வருடங்களுக்கு முன்பு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா.

இந்நிலையில், நம்ம பக்கத்து வீட்டு அம்மாவை போல் புடவை அணிந்து இடுப்பில் மடிப்பை தூக்கி சொருகியப்படி, மாட்டின் அருகில் நின்ற புகைப்படத்தை ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து  ரசிகர்கள் ஷாக்  ஆன நிலையில், அது அவர் நடிக்கும் சங்கதலைவன் படத்தின் தொடர்பான புகைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த படம் நாளை வெளியாவதாகவும் அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement