சினிமா

பார்க்கும்போதே பயராகுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்

Summary:

சீரியல் நடிகை சித்ரா  தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள  புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை சித்ரா  தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள  புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய்டிவி  தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து, அதன்மூலம் சில சீரியல்களில்  சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வி.ஜெ. சித்ரா. இதைத்தொடர்ந்து விஜய்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாண்டியன்ஸ்டார்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

முல்லை கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறார். கதிர்-முல்லை ஜோடி போல் வாழவேண்டும் என்ற ஆசைவரும் அளவிற்கு இவரது நடிப்பின் மூலம் இளசுகளை  கவர்ந்து வருகிறார் சித்ரா. மேலும் சமூக வலைத்தளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் அம்மணி.

சமீமத்தில் தான் இவருக்கு ஹேமத் என்பவருடன் நிச்சயம் முடிந்தது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது துப்பட்டாவை விலக்கியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement