சினிமா

நடிகர் விவேக்கா இது! செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே! அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Summary:

வெள்ளை நிற உடையில், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் நடிகர் விவேக் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சின்ன கலைவாணர் என பெருமையோடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவர் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில்,  தனது காமெடியால் ரசிகர்களை கட்டி இழுத்து முன்னணி காமெடி நடிகராக திகழ்கிறார்.

 மேலும் அசத்தலான கருத்துக்களோடு, காமெடி செய்யும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தவறியதில்லை. மேலும் அண்மைக்காலமாக கொரோனா விழிப்புணர்வு குறித்து ஏராளமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் நடிகர் விவேக் தற்போது அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வெள்ளை நிற உடையில், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் செம ஸ்டைலாக இருக்கும் நடிகர் விவேக்கின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான  நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விவேக் எனது இந்த அசத்தல் லுக்கிற்கு,  காஸ்டியூம் ஸ்டைலிஸ் சத்யா மற்றும் அவரது குழுவினர்தான் காரணம் என நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement