சினிமா

வச்ச கண் எடுக்காமல் அஜித்தை ரசிக்கும் நயன்தாரா! வெளியான ரொமான்ஸ் புகைப்படம்

Summary:

viswassam new photo released

பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம் திரைப்படத்துக்கு, அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீரம், விவேகம், வேதளம் ஆகியப் படங்களைத் தொடர்ந்து இதனையும் இயக்குநர் சிவாவே இயக்குகிறார். 

விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவும், அஜித்துடன் 4 ஆவது முறையாக கைகோர்த்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் சிங்கள் ட்ராக் நேற்று வெளியானது.

இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நயன்தாரா நடித்துள்ளார். அவர் அஜித்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில நாட்களுக்கு விஸ்வாசம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் டிராக்டரில் செல்லும் போது எடுத்த புகைப்படத்தினை நயன்தாரா இன்று வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று அஜித்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்து அஜித்தை ரசிப்பதை போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.


Advertisement