சினிமா

100 மில்லியனை கடந்த விஸ்வாசம்! மரணமாஸ் காட்டிய தல ரசிகர்கள்!

Summary:

Viswasam movie song reached 100 million youtube views

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். வெளியான நாளில் இருந்து இன்றுவரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது விஸ்வாசம் திரைப்படம்.

விஸ்வாசம் தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இன்றும் தமிழகம் முழுவதும் இப்படம் 100 திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தை போலவே படத்தில் வந்த பாடல்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் சேர்த்து யு-டியுபில் 100 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

இதில் குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் மட்டும் 30 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. கண்டிப்பாக விஸ்வாசம் படத்தின் பாடல்கள் தான் அஜித் திரைப்பயணத்தில் அதிகம் ஹிட்ஸ் கொடுத்த பாடலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Advertisement