அதிக வசூல், இந்த ஆண்டு முதல் இடத்தில் இருப்பது இந்த படமா? பிரபல தியேட்டர் வெளியிட்ட மாஸ் லிஸ்ட் !!
சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு குடும்பத்தார்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது. பாடல்களும் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படமும் நல்ல வசூல் செய்தது.

பின்னர் அதனை தொடர்ந்து வெளிவந்த காஞ்சனா 3, தடம், அவெஞ்சர்ஸ், லயன் கிங் ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது. சமீபத்தில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை மற்றும் கோமாளி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான வெற்றி தியேட்டர் தங்களது திரையரங்கில் டாப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படம் தான் 2019ல் அதிக வசூல் சாதனை செய்த படம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
8 movies have qualified for the #VettriTopTen 2019 (surpassing 20k tickets)
— Rakesh Gowthaman (@VettriTheatres) August 30, 2019
LIST AS PER RELEASE DATE#Viswasam #Petta#SuperDeluxe #Kanchana3#AvengersEndgame #TheLionKing #NerKondaPaarvai#Comali