சினிமா

அவராலதான் சம்பாதிச்சு சாப்பிடணுங்கிற அவசியம் எனக்கு இல்லை ! பிரபல நடிகர் மீது செம காட்டத்தில் விஷ்ணு விஷால்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் தற்போது பிரபுசாலமன் இயக்கத்தில் காடன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது நிலம் வாங்கி தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா சூரியை ஏமாற்றியதாக அவர் அளித்த புகார்  குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஷ்ணு விஷால்,  இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் அதுகுறித்து என்னால் நிறைய பேச முடியாது.  அவர் கொடுத்த புகாரில் தொடங்கி நடக்கும் அனைத்தையும் என்னால் விளக்க முடியும். அதன்பின் அவருக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.


ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட புகாரில் எனக்கும், என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். சில வருடங்களுக்கு முன் என் தந்தையின் காலில் விழுந்து, நீங்கள்தான் என் கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்கின்ற அவசியம் எனக்கு இல்லை என காட்டமாக கூறியுள்ளார்.


Advertisement