சினிமா

விஷாலின் வீரமே வாகை சூடும் படுநஷ்டம்.! இதுவரை இவ்வளவு தான் வசூலா?? ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

விஷாலின் வீரமே வாகை சூடும் படுநஷ்டம்.! இதுவரை இவ்வளவு தான் வசூலா?? ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகி கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இயக்குனர் து.ப சரவணன் இயக்கியுள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக டிம்பிள் ஹாயாதி, காமெடி நடிகராக யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வீரமே வாகை சூடும் படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானது. தொடர்ந்து விஷாலின் படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் படம் வெளியான அன்றே நெகட்டிவான விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்த நிலையில் 20 கோடி பட்ஜெட்டில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படம்  எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை என கூறப்படுகிறது. அதாவது படம் வெளியான 3 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Advertisement