இனிமேல் அதை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை! கொந்தளித்த நடிகர் விஷால்!

vishal talk ain angry


vishal talk ain angry


தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார். இதனையடுத்து இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. 

தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார், இந்த வாரம் இவர் நடிப்பில் அயோக்யா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் நடிகர் விஷால் பாலியல் தொல்லைக்கு எதிராக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த பதிவில், தற்போது அயோக்யா படத்தில் தன் வேலைகள் அனைத்து முடிந்துவிட்டது என்றும், மேலும், எந்த ஒரு பெண்ணையும் நாசம் செய்பவனுக்கு, தூக்கு தண்டனை தான்னு பயம் வரனும் என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.