விஷாலின் ரத்னம் பட அப்டேட்: நாளை காலை ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.!Vishal Rathnam Movie Update Tomorrow 

 

ஜி ஸ்டுடியோஸ், ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், எம். சுகுமாரின் ஒளிப்பதிவில் அட்டகாசமாக உருவாகி வரும் திரைப்படம் ரத்னம்.

ஹரி - விஷால் கூட்டணி தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த கூட்டணி. இதனால் ரத்னம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல, தேவி ஸ்ரீ பிரசாந்த் - ஹரி கூட்டணியில் உருவாகும் 6வது படமும் ஆகும்.

படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில், படத்தின் முதற்பார்வை போஸ்டர், நாளை (1 ஜனவரி 2024) அன்று காலை 7 மணியளவில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஷாலின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.