"லவ்வர்லாம் இல்லைங்க அது ஜஸ்ட் பிராங்க் தான்!" வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்!Vishal post about recent viral video

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஷால். பெரும்பாலும் ஆக்ஷன் படங்களில் நடித்து பிரபலமடைந்த விஷால், நடிகர் அர்ஜுனுக்கு "வேதம்" படத்தில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

vishal

இதையடுத்து 2004ம் ஆண்டு "செல்லமே" படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து முன்னணி நாயகனாக இருக்கும் இவர், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வென்றுள்ளார். மேலும் விஷால் பிலிம் பாக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இவர் தனது எக்ஸ் தளத்தில், "சமீபத்தில் வைரலான வீடியோ குறித்து விளக்கமளிக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். நான் நியூயார்க்கில் தான் என் உறவினர்களுடன் வழக்கமாக தங்கும் இடத்தில் இருக்கிறேன். கடினமான ஆண்டின் மன இறுக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு ஆண்டும் இதைப் பின்பற்றுகிறேன்.

vishal

கிறிஸ்துமஸ் தினத்தன்று என் உறவினர்களால் பிராங்க் செய்து முடிக்கப்பட்ட வீடியோ தான் அது. என்னுள் இருக்கும் குழந்தையை வெளிக்கொண்டு வருவது எனக்குப் பிடிக்கும். சிலர் என்னை டார்கெட் செய்ய முயன்றனர். ஆனால் அதில் எனக்கு வருத்தமில்லை" என்று கூறியுள்ளார்.