அதிரடி.. ஆக்சன்.. சூப்பர்ஹிட் பட இயக்குனருடன் இணையும் விஷால்! ஜோடி சேரும் இளம்நடிகை யார்னு தெரியுமா??vishal-next-movie-heroine-is-priya-anand

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறக்கும் விஷால் அண்மையில் சண்டைக்கோழி 2, அயோக்யா, ஆக்சன், சக்ரா என தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளுமளவிற்கு வெற்றி பெறவில்லை. 

இந்த நிலையில் விஷால் தற்போது எனிமி என்ற படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரெஜினா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

vishal

அதாவது விஷால் அடுத்ததாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆக்சன் கதையில் உருவாகும் இப்படத்தை பைவ்ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.