சினிமா

நடிகர் விஷால் படம் ரிலீஸ் குறித்து பரவிவரும் தகவல்! உண்மைதானா? செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குனர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய எம்.எஸ் ஆனந்தின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். அவர்களுடன் ரெஜினா, சிருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கர்,  மனோபாலா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். சக்ரா திரைப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சக்ரா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படம் தீபாவளியை முன்னிட்டு நிச்சயம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.


Advertisement