சினிமா

கன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல்! வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

Summary:

Vishal beat kanada actor video leaked

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விமல். தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான விமல் களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். களவாணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வர ஆரம்பித்தார். அடுத்தடுத்த படங்களிலும் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் விமல்.

https://cdn.tamilspark.com/media/1751837x-Vimal.jpg

கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரெங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றிப்படங்களாக அமைந்தது. சமீபத்தில் இவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு படத்தில் நடித்திருந்தார் விமல்.

இந்நிலையில் நேற்று சென்னை விருகம்பாகத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் குடிபோதையில் அங்கு சென்ற விமல் அபிஷேக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அவரை தாக்குகின்றனர். அது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் விமல் தற்போது தலைமறைவாகியுள்ளார்.


Advertisement