"அதிதி சங்கர் இனி சினிமாவில் நடிக்க மாட்டாரா" இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!

"அதிதி சங்கர் இனி சினிமாவில் நடிக்க மாட்டாரா" இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!


viral-news-about-aditi-sanker

1993ம் ஆண்டு வெளியான "ஜென்டில்மேன்" திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷங்கர். தொடர்ந்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட பிரம்மாண்டப் படங்களை இயக்கியுள்ளார்.

Aditi

மேலும் இவர் காதல், கல்லூரி, ஈரம், வெயில் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். இதையடுத்து இவரது மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளியான "விருமன்" திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து, தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்திலும் நடித்துள்ள அதிதி ஷங்கர், சில பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவரது கைவசம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படமும், ராம்குமார் இயக்கும் ஒரு படமும் இருக்கிறது.

Aditi

முன்னதாக டாக்டர் படிப்பை படித்துள்ள அதிதி ஷங்கர், தனது ஆசைக்காகவே சினிமாவில் நடிக்க வந்திருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் டாக்டர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.