"இவர் என் மகள் இல்லை, குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க" நடிகர் பொன்னம்பலத்தின் வேண்டுகோள்..
'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் "கபாலி (எ) பொன்னம்பலம். இவர் செந்தூரப்பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், சண்டைப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும், 'இடியுடன் மழை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்ட பொன்னம்பலம், சிறிது காலத்தில் அரசியலில் இருந்து விலகி, பின்னர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவருக்கு கார்த்திக் என்ற மகனும்,கிருத்திகா என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சரண்யா பொன்னம்பலம் என்ற பெயரில் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்த பலரும் பொன்னம்பலத்தின் மகள் இவர் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் நடிகர் பொன்னம்பலத்தின் மகளின் பெயர் கிருத்திகா என்றும், மேற்கூறிய பெண் இவரது மகள் இல்லையென்றும், பொய்யான செய்தியால் குடும்பத்திற்குள் குழப்பத்தை உண்டு பண்ணாதீர்கள் என்றும் பொன்னம்பலம் கேட்டுக் கொண்டதாகவும் தற்போது தெரியவந்துள்ளது.