அம்மாடியோவ்.. இவ்வளவா!! தங்கலான் படத்திற்காக சீயான் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??
அம்மாடியோவ்.. இவ்வளவா!! தங்கலான் படத்திற்காக சீயான் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் எக்கசக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் நாடு முழுதும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து விக்ரம் கோப்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் உண்மையான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.
இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு
ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அப்படத்திற்காக நடிகர் விக்ரம் 28 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.