110 நாட்கள்.. வெற்றிகரமாக முடிஞ்சுருச்சு! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட உற்சாக அறிவிப்பு!!

110 நாட்கள்.. வெற்றிகரமாக முடிஞ்சுருச்சு! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட உற்சாக அறிவிப்பு!!



vikram-movie-shooting-over

கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான, ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனராம். மேலும் ஷிவானி, மகேஷ்வரி, மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற விக்ரம் படத்தின் ஷூட்டிங் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இதனை இயக்குனர் லோகேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர்,110 நாட்கள் கடின உழைப்புக்கு பின்னர் விக்ரம் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. படத்திற்காக அதிகமான கடின உழைப்பை கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.