பம்பாய் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த மாஸ் நடிகரா? அப்பறம் ஏன் விலகிட்டார்னு பார்த்தீங்களா!!

பம்பாய் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த மாஸ் நடிகரா? அப்பறம் ஏன் விலகிட்டார்னு பார்த்தீங்களா!!


vikram-is-first-commit-in-acting-bombay-movie

தமிழ் சினிமாவில் 1992ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான திரைப்படம் பம்பாய். இப்படத்தை முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கியிருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. பம்பாய் படத்தில் ஹீரோவாக அரவிந்த்சாமி மற்றும் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக மனிஷா கொய்ராலா  ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த நடிகர் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

vikram

அதாவது சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்த பம்பாய் படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் நடிகர் விக்ரம்தான் ஒப்பந்தமாகியிருந்தாராம். ஆனால் அப்பொழுது அவர் புதிய மன்னர்கள் என்ற படத்திலும் நடித்து வந்தாராம். அந்த படத்திற்காக விக்ரம் தாடி வளர்த்துள்ளார். ஆனால் பம்பாய் படத்தில் நடிக்கவேண்டுமென்றால் அதனை நீக்கவேண்டி இருந்ததால் அவர் அப்படத்திலிருந்து விலகி கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.