
Summary:
விக்ராந்த் தற்போது ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் மிஷ்கின், சுசீந்திரன் பல பிரபலகள் நடிக்கும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இப்படத்தை அடுத்து சிகை படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு படத்தில் நடிக்கிறார் விக்ராந்த்.
இந்த புதிய படத்திற்கு ‘பக்ரீத்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பக்ரீத் திருநாள் முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டிருக்கிறார்.
ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விக்ராந்த்திற்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இமான் இசையமைக்க எம்.எஸ்.முருகராஜ் இப்படத்தை தயாரிக்கிறார் .
Advertisement
Advertisement