சினிமா

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் போட்ட ஒரு ட்வீட்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Summary:

vijaykanth post seeing movie photos

தமிழ் சினிமாவில் பல நாட்டுப்பற்று மிகுந்த படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். மேலும் தேமுதிக கட்சியின் தலைவருமாக செயல்படும் அவர் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு,சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காகஅமெரிக்கா சென்றுள்ளார். இதனை ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

ஆனால் அங்கு விஜயகாந்திற்கு கிட்னி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், 
தற்போது அவருக்கு கிட்னி கிடைத்துவிட்டதாக  தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த மாதம் இறுதியில் ஆபரேஷன் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் வருத்ததில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்வகையில் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கேப்டன் தனது மனைவியுடன் அமெரிக்கா ஐமேக்ஸ் திரையரங்கில் ஆங்கில படமான அக்குவா மேன் என்ற திரைப்படத்தை  பார்த்துள்ளார்.அந்த புகைப்படம் பதிவிடப்பட்டு, ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 


Advertisement