"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நம்ம கேப்டன் விஜயகாந்தா இது! ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டாரே! புகைப்படத்தைக் கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
80 மற்றும் 90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்த அவரை அனைவரும் பாசமாக கேப்டன் என அழைத்து வந்தனர்.
டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த அவர் சமூக நலம் மற்றும் தேசப்பற்று கொண்டு ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை துவக்கி தீவிர அரசியலில் இறங்கி எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர் என படிப்படியாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுத்த நிலையில் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.
எப்படி இருந்த கேப்டன்.. Time is cruel.. pic.twitter.com/DAg2KSlTP7
— James Stanly (@JamesStanly) February 27, 2022
அதனைத் தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்த் மீண்டும் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய தோற்றம் என்று புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் விஜயகாந்த்தா இது! இப்படி எலும்பும் தோலுமா ஆகிட்டாரே என ஷாக்காகியுள்ளனர்.