அட அட.. இளம்வயது விஜயகாந்துக்கு ரொமான்டிக்காக கோட் மாட்டிவிடும் பிரேமலதா..! எவ்ளோ அழகா இருக்காங்க..! 

அட அட.. இளம்வயது விஜயகாந்துக்கு ரொமான்டிக்காக கோட் மாட்டிவிடும் பிரேமலதா..! எவ்ளோ அழகா இருக்காங்க..! 



Vijayakanth and premaladha romantic photo

தமிழ் திரையுலகில் 80's, 90'sகளில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களுள் முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த். இவரது நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட்ராஜ், ரமணா, சத்ரியன், கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களும் இதுவரையிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

vijayakanth

இதனை தொடர்ந்து அரசியலில் களம்புகுந்த விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின் முழுநேரம் அரசியலிலே கவனம் செலுத்தி தொடங்கி, மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருடைய தங்க மனதிற்காகவே பலரும் இன்றுவரை இவருடைய ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

vijayakanth

இவருக்கு தற்போது உடல்நலம் சரியில்லாமல் போகவே, முழுமையாக மருத்துவர் கவனத்தில் இருந்துவருகிறார். விரைவில் பழையபடி கம்பீரமாக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், இளம்வயதில் விஜயகாந்துக்கு அவரது மனைவி பிரேமலதா கோட் போட்டு விடும் அழகிய ரொமாண்டிக் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.