அடக்கடவுளே.. என்னதான் ஆச்சு?.. திடீரென விவாகரத்து முடிவை அறிவித்த பிக்பாஸ் பிரபலம்..! ரசிகர்கள் பேரதிர்ச்சி..!!vijay-tv-vaishnavi-may-divorce

தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் வைஷ்ணவி. அவர் சாவி சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. RJ வாக பணியாற்றி வரும் வைஷ்ணவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இதன்பின் அவரது நீண்ட நாள் காதலரான அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். விமான பைலட்டாக அஞ்சன் பணியாற்றி வரும் நிலையில், கடந்த பல வருடங்களாகவே காதலித்து வந்துள்ளனர். 

cinema

மேலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் சமூகவலைதளங்களில் அதிகம் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் ஆறு வருடமாக ஒன்றாக இருந்த அவர்கள் தற்போது பிரிய இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதனை வைஷ்ணவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், "நாங்கள் நண்பர்களாக தொடர்வோம். மோசமான விஷயம் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரி என்று இருவருமே முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

cinema

அத்துடன் எங்களுக்காக யாரும் வருத்தப்படாதீர்கள். சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடமிருக்கும்" என்று வைஷ்ணவி கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.