விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்! இதுதான் விஷயமா?Vijay tv priyanka song a son in thevarattam movie

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அவர்களில் ஒருவர்தான் தொகுப்பாளினி பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பிரியங்கா.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டும் இல்லாது பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ப்ரியங்கா. இந்நிலையில் கவுதம் கார்த்தி நடிக்கவும் தேவராட்டம் என்ற  படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா. இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கொடிவீரன் படத்தைத் தொடர்ந்து முத்தையா தேவராட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

priyanka

இந்த படத்தில் மதுர பளபளங்குது என்ற பாடலை விஜய் சேதுபதி, நிவாஸ் கே.பிரசன்னா, நிரஞ்சனா ரமணன், பிரியங்கா ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் ப்ரியங்காவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.