மாடு பிடித்து, பால் கறக்கும் விஜய் டிவி பிரபலம்.! கொரோனா ஊரடங்கு எதிரொலி. யார் அந்த நடிகர் தெரியுதா.?

Vijay tv fame dheena current status due to lock down


Vijay tv fame dheena current status due to lock down

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் உட்பட பலரும் தங்கள் வீடுகளிலையே முடங்கியுள்ளனனர். துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு துடைப்பது, பாத்ரூம் கழுவுவது என பிரபலங்கள் பலரும் தாங்கள் தற்போது செய்துவரும் வேலைகளை வீடியோவாக இணையத்தில் பதிவிடுவருகின்றனர்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தீனா தனது வீட்டில் மாடு பிடித்து கட்டுவது, பால் கறப்பது என பிசியாக இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீட்ல வேலை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்ற தலைப்புடன் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் தீனா.

corono

இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யார் தொடர் மூலம் பிரபலமாகி, தற்போது நடிகர் கார்த்தி உடன் 'கைதி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், தளபதியின் மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் தீனா.