எந்த ஒரு முன்னணி நடிகையும் செய்ய தயங்கும் விஷயத்தை செய்த தொகுப்பாளினி டிடி.! இணையத்தில் வைரலாகும் பதிவு.!

எந்த ஒரு முன்னணி நடிகையும் செய்ய தயங்கும் விஷயத்தை செய்த தொகுப்பாளினி டிடி.! இணையத்தில் வைரலாகும் பதிவு.!



vijay-tv-dd-shared-hug-exp

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி  தொகுப்பாளராக திகழ்ந்து வருபவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக காபி வித் DD நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs girls, சூப்பர் சிங்கர், என்கிட்ட மோததே போன்ற நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல், ஒருசில படங்களில் முக்கிய வேடத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார் DD .

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புற்றுநோயாளிகளுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் கட்டிப்பிடி வைத்தியம் செய்துள்ளார், மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்துள்ளார் தொகுப்பாளினி டிடி. தனது பழைய நினைவுகளை டைரியில் எழுதி அதை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார் DD.