BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
இதெல்லாம் நமக்கு தேவையா கோபி?.. ராதிகா பேரைக்கேட்டதும் அலறி நடுங்கிய கோபியால் கலகலப்பு..! இந்த வார ப்ரோமோ வைரல்..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. தனது மனைவியின் அறியாமையை பயன்படுத்தி அவரைக் கட்டுக்குள் வைத்திருந்த கோபி, ஒரு கட்டத்தில் பாக்யாவை வெறுத்து ஒதுக்கி வேறு திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தனது முன்னாள் காதலியை திருமணம் செய்து கொண்டார்.

இன்று பல விதங்களில் அல்லல் பட்டு வருகிறார். இதற்கு மத்தியில் பரபரப்பை கூட்டும் வகையில் கோபி தனது தாயின் வீட்டிலேயே வந்து வசிக்க அங்கு நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் லூட்டிகளாக தொடர்கின்றன. இந்த நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில், பாக்யாவின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருகின்றனர்.
அப்போது அங்கு வந்த கோபி நானும் உங்களுடன் சேர்ந்து இன்பமாக இருக்கிறேன் என்று வாயை விட, கோபியை அமைதியாக அமர வைத்த எழில் எதற்காக சிரிக்கிறீர்கள்? என்று கேட்ட கோபியிடம் ராதிகாவின் பெயரைச் சொல்ல, அதுவரை அந்த குடும்பத்திற்கு பெரிய தூண் போலவும், யாருக்கும் அஞ்சாதவர் போல பாவனை செய்து வந்த கோபி பதறியடித்து நடுநடுங்கும் நிகழ்வைக் கண்டு குடும்பமே சிரித்து கலகலப்பான சம்பவமாக நடந்திருக்கிறது.