கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டிடி! புகைப்படத்தைக் கண்டு விமர்சித்த நெட்டிசன்கள்! ஏன்னு பார்த்தீர்களா!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட டிடி! புகைப்படத்தைக் கண்டு விமர்சித்த நெட்டிசன்கள்! ஏன்னு பார்த்தீர்களா!!


vijay-tv-anger-dd-got-corono-vaccination

சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாவது அலையாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஏராளமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் சில மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சம் இன்னும் இருந்து வருகிறது. அதனை போக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட திரைப்பிரபலங்கள் பலரும் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடியும் தடுப்பூசி போட்டுகொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ரொம்ப யோசிச்சேன்,பயந்தேன். பின்னர் எனது மருத்துவரிடம் கேட்டபோது, தடுப்பூசியினால் மட்டும்தான் நம்மை கொரோனாவிலிருந்து காப்பாற்ற முடியும். மூன்றாவது அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் என பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் அந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பலரும் டிடி ஊசி போடவே இல்லையா, நர்ஸ் சும்மாவே நிக்கிறாங்க. வெறும் போஸ் மட்டும்தான் கொடுக்கிறீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.