கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
உச்சகட்ட மகிழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் நடிகர் அமித்! இதுதான் காரணமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் மூலம் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமித். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் நடிகர் அமித்தும் விஜய் டீவியில் முக்கிய நடிகராக கருதப்பட்டார்.
இந்த தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடர் மூலம் மீண்டும் விஜய் டீவியில் என்ட்ரி கொடுத்தார் அமித். இந்நிலையில் அமித்துக்கும், ஸ்ரீ ரஞ்சனி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இவர்களது திருமண நிகழ்வுகளை விஜய் தொலைக்காட்சி பிரமாண்டமாக ஒளிபரப்பியது.
இதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி தொகுப்பாளராக மீறினார் ஸ்ரீ ரஞ்சனி. தற்போது தனது மனைவி ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக அமித் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அண்மையில் சீமந்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.