சினிமா

ஓட்டு போட வந்த இடத்தில், நடிகர் விஜய் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

Summary:

Vijay trying to help after voting

தேர்தல் நாளான நேற்று சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களது ஓட்டினை பதிவு செய்வதற்காக வாகு சாவடிக்கு சென்றனர். இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் பல்வேறு புதிய கட்சிகளும் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இதில் நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக காலையிலையே வந்து வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

விஜய் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது சிறுமி ஒருவர் விஜய்யுடன் புகைப்படம் எடுப்பதற்காக தொலைபேசியுடன் வந்தார். அந்த சிறுமியிடம் அன்பாக நடந்துகொண்ட விஜய் உனது அம்மா, அப்பா எங்கம்மா என்று விசாரித்தார்.

அதேபோல விஜய் நடந்துவரும்போது மாற்று திறனாளி ஒருவரை சிலர் தூக்கி வருவதை பார்த்த விஜய் அவர்களுக்கு உதவி செய்வதற்காக முயன்ன்றார். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ. 


Advertisement