கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
விவேக் குழி பறித்ததை குறித்து, மேடையில் போட்டுடைத்த தளபதி விஜய்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து தனது காமெடியால் சிரிக்க வைப்பது மட்டுமின்றி ரசிகர்களை சிந்திக்க வைத்து முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் விவேக். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர் சமூக சேவை பணிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். மேலும் அதை தனது ரசிகர்களும் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த 16 ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இவரது மரணம் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என பலருக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள் அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Sir we will always miss you 😭 #RIPVivekpic.twitter.com/UTps8yQC2N
— Vijay Fans Trends ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ 😷 (@VijayFansTrends) April 17, 2021
இந்நிலையில் பிகில் திரைப்பட நிகழ்ச்சியின் போது நடிகர் விவேக் மரம் நடுவது குறித்து விஜய் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அப்பொழுது அவர் பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர்கள் மீது நமக்கு கோபம் வரும். ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது. ஒரு நடிகனாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, அதுமட்டுமின்றி செயலில் இறங்கி செயல்படவும் வைத்துள்ளார் என பாராட்டி பேசியுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.