சினிமா

அந்த முன்னணி நடிகரின் படத்திலிருந்து திடீரென விலகியது இதனால்தான்.! ஆனால்... மிகுந்த வருத்தத்துடன் மனம்திறந்த நடிகர் விஜய்சேதுபதி!

Summary:

Vijay sethupathi talk about releave from allu arjun movie

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தனது திறமையாலும், தீராத முயற்சியாலும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த சைரா படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்த நிலையில் சமீப காலமாக விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு என ஏராளமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்திலும் அவர் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. தமிழ், மலையாளம், தெலுங்கு,  கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த  திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. 

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து திடீரென விஜய்சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் படத்தில் இருந்து விலகியது ஏன்? அவருக்கு வில்லனாக நடிக்க மாட்டீர்களா?  என ரசிகர்கள் பலரும் கேள்விகளை எழுப்பினர். இந்நிலையில் விஜய்சேதுபதி இதுகுறித்து தற்போது  பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியதாவது, கால்ஷீட் பிரச்சினை காரணமாக அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா படத்தில் நடிக்க முடியவில்லை. இயக்குநர் சுகுமாரன் சார்கிட்ட நேரில் சென்று  இந்த விஷயத்தை கூறிவிட்டேன் அல்லு அர்ஜூன் பெரிய நடிகர். கால்சீட் இல்லாமல் நம்மால் சொதப்பிவிட கூடாது என பயமா இருந்தது. புஷ்பா பட கதையும் சூப்பரா இருந்தது. பெரிய டைரக்டர் வேற. இதை மிஸ் செய்ததற்கு  நான் மிகவும் வருத்தபடுகிறேன் என கூறியுள்ளார். 


Advertisement