"லாபத்தில் ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம்" - மேற்கு தொடர்ச்சி மலை தயாரிப்பாளர் விஜய் சேதுபதி பேட்டி

"லாபத்தில் ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம்" - மேற்கு தொடர்ச்சி மலை தயாரிப்பாளர் விஜய் சேதுபதி பேட்டி



vijay-sethupathi-request-to-support-new-hero-antony

லெனின் பாரதி இயக்கத்தில் ஆண்டனி, காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உண்மையான நிலையைச் சித்தரிப்பதாக பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது. 

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

vijay sethupathi

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தைத் தயாரிக்க நினைத்து ஏன் எனக் குறிப்பிட்டார். 

“நான் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தபோது என்னை மிகவும் மனிதாபிமானத்தோடும் அன்போடும் நடத்தியவர் லெனின் பாரதி. அவருக்காகத்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என விரும்பினேன்.” என்றார். மேலும், “இந்தப் படத்தின் மூலம் லாபத்தில் ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம். எவ்வளவு கிடைத்தாலும் அதை படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன்” என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார். 

vijay sethupathi

மேலும் பேசிய அவர்,  முதலில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தைப் பார்த்தபோது எனக்கு பிடிக்கவில்லை, திருப்தியாகவும் இல்லை மேலும் இந்த படத்தை வெளியிடவும் முடியவில்லை யாரும் வாங்க முன்வரவில்லை.

ஆனால் பத்திரிகையாளர்கள் பாராட்டிய பிறகு தான் இந்த படத்தின் அருமை எனக்கு தெரிந்தது.

vijay sethupathi

மேலும் படத்தின் இயக்குநர் லெனின் பாரதி மிகவும் நேர்மையானவர் இந்த படத்தை கடைசிவரை சுமந்து கொண்டிருந்தார்.இதனால் இந்த படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் அவருக்கு தான் போய் சேர வேண்டும் மேலும் இந்த படத்தை தயாரித்தேன் என்ற பெருமை கூட எனக்கு வேண்டாம்.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆண்டனி நன்றாக வரவேண்டும்,என்னை விட அதிகமாக முன்னேற வேண்டும்.

அவ்வளவு திறமைசாலி அவர். அவருக்கு உங்களது ஆதரவு வேண்டும் என்று நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க பேசினார்.