சினிமா

பத்தாம் வகுப்பு குரூப் போட்டோவால் த்ரிஷாவிற்கு சேலஞ்ச் வைத்த விஜய் சேதுபதி..!! த்ரிஷாவிற்கு உதவ நீங்க ரெடியா..?

Summary:

vijay sethupathi released his 10th std group photo

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல்வேறு வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கடந்த வாரம் இவரது நடிப்பில் வெளியான செக்கச் சிவந்த வானம் தியேட்டர்களில் நல்ல வசூலை பெற்று வருகின்றது. மேலும் இவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படம் 96. இந்த திரைப்படத்தில் இவர் நடிகை திரிஷாவுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். 

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமானது அவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் போது தனது தோழர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமாகும். 

இந்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் 96 படத்தில் தன்னுடன் நடித்த இருக்கும் த்ரிஷாவிற்கு இதில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்டுபிடிக்குமாறு சேலஞ்ச் வைத்துள்ளார். மேலும் அதில் ரமேஷ் திலக் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகியோர் பெயர்களையும் பதிவிட்டுள்ளார். 


Advertisement