சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் இருந்து விலகினாரா விஜய் சேதுபதி? ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

Summary:

Vijay sethupathi left from manirathnam ponnien selvan movie

சினிமாவில் ஒரு துணை நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெறுகிறது. அதில் ஒன்றுதான் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம். பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படம் ஒரு காதல் காவியமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கல்கியின்,  காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' நாவலை, படமாக்க பல ஆண்டுகளாகவே முயற்சித்து வருகிறார்  பிரபல இயக்குனர் மணிரத்னம்.  பலவருட முயற்சிகளுக்கு பிறகு பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்தினம் தயாராகிவிட்டதாகவும், விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, சிம்பு, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கும் இந்த படம் காலதாமதமாகி வருவதாகவும், அடுத்தடுத்து விஜய்சேதுபதி பல படங்களில் கமிட் ஆகி வருவதாலும் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. செக்க சிவந்த வானம் படம் மாபெரும் வெற்றிபெற்றதால், விஜய் சேதுபதி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.


Advertisement