விவசாயிகளுக்காக ரியல் ஹீரோ விஜய் சேதுபதி செய்த அசத்தலான காரியம்.! பிரமித்துப்போன ரசிகர்கள்!!
விவசாயிகளுக்காக ரியல் ஹீரோ விஜய் சேதுபதி செய்த அசத்தலான காரியம்.! பிரமித்துப்போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. அவர் தற்போது சங்கத்தமிழன், கடைசி விவசாயி, மாமனிதன், உப்பென்னா, ரணசிங்கம், ஓ மை கடவுளே, தளபதி 64, இடம் பொருள் ஏவல் என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் சாய் தன்ஷிகா, கலையரசன், கெஜபதி பாபு, ஹரிஷ் உத்தமன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விவசாயிகளை மையமாக கொண்டு உருவாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் பகுதியிலுள்ள பெருவயல் என்ற கிராமத்தின் சுற்றுவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்திற்கு விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்ட நிலையில் அதற்காக செட் அமைக்கும் பணிகள் நடைபெறவிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி அதனை செட்டாக அமைக்காமல் கட்டிடமாக கட்ட கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த ஊர் விவசாயிகளுக்கு அதனை கொடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.