திருமணம் அப்போதுதான்.. ஓப்பனாக போட்டுடைத்து நடிகை சதா சொன்ன விஷயம்.! ரசிகர்கள் ஷாக்!!
அம்மாடியோவ்.. பீஸ்ட் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் இவ்வளவா! வெளிவந்த தகவல்! எம்புட்டுனு பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பீஸ்ட் மோட் பாடல் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
அதற்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்காக தளபதி விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் இந்த படத்திற்காக 80 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.