காவல் துறையில் புகார் அளிக்க சென்ற கருணாகரனும் என்ன நடந்தது தெரியுமா?

சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து அரசியல்வாதிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அந்த சமயத்தில் நடிகர் கருணாகரனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களை முன்வைத்து விஜய்யை சீண்டி ட்வீட் செய்தார். இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.
கடந்த சில நாட்களாக கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் பெரிய போரே நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் கோபமான கருணாகரன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு எடுத்துவிட்டார்.
காவல் ஆணையரிடம் தனக்கு வந்த மோசமான மெசேஜ் காண்பிக்க, அதையெல்லாம் காப்பியாக எடுத்து கொடுங்கள், எப்.ஐ.ஆர் போடலாம் என காவல் ஆணையர் கூறியுள்ளார்.
புகார் அளிக்க வேண்டுமானால், எந்த எண்ணிலிருந்து மிரட்டல், அவதூறு பேச்சுகள் வந்தன, அதன் பதிவு, எண்கள் லிஸ்ட், வாட்ஸ் அப்பில் மிரட்டல், ஆபாசமாகத் திட்டுவது போன்ற பதிவு வந்திருந்தால் அதன் ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவற்றை காப்பி எடுத்து புகாராக எழுதிக்கொண்டு வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து கருணாகரன் இரண்டு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.