தன்னை விட 9 வயது இளைய நடிகரை காதலிக்கும் விஜய் பட நடிகை..! இதற்கு பேர் தான் காதலுக்கு கண்ணில்லை என்பதா?..!! 

தன்னை விட 9 வயது இளைய நடிகரை காதலிக்கும் விஜய் பட நடிகை..! இதற்கு பேர் தான் காதலுக்கு கண்ணில்லை என்பதா?..!! 


Vijay movie actress loves pakisthan actor

தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யுடன் "புதியகீதை" படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அமீஷா படேல். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமித்ஷா அவ்வப்போது தனது நீச்சல் உடையில் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்.

இவர் சமீபத்தில் கூட பாகிஸ்தான் நடிகரான இம்ரான் அப்பாஸுடன் இருக்கும் வீடியோவை சமூகஊடகத்தில், "கடந்த வாரம் பஹ்ரைனில் எனது சூப்பர் ஸ்டார் நண்பரான இம்ரான் அப்பாஸுடன் இருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அமீஷா மற்றும் பாபி தியோல் நடித்த கிராந்தியின் தில் மே தார்த் சா ஜகா ஹை பாடலில் அமிஷாவும், இம்ரானும் ரொமான்ஸ் செய்து கொண்டனர். 

அத்துடன் பிபாஷா பாசு நடித்த கிரியேச்சர் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இம்ரான், கரண் ஜோஹரின் ஏ தில் ஹை முஷ்கில் என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், அமீஷாவும் அவரை விட வயதில் 9 வயது இளைய இம்ரானும் காதலித்து வருகின்றனர்.