சினிமா

தெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.?

Summary:

தெலுங்கானா முதல்வரை சந்தித்த தளபதி விஜய்... என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக, டாப் ஹீரோக்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் கடைசியாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கிறார். தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் திடீரென தளபதி விஜய் அவர்கள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்கிற விவரம் வெளிவரவில்லை. மரியாதை நிமித்தமான் சந்திப்பு என முதலமைச்சர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்து உள்ளனர்.


Advertisement