நள்ளிரவில் எதிரெதிரே மோதிகொண்ட கார்கள்! விபத்தில் சிக்கிய பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ்!!

நள்ளிரவில் எதிரெதிரே மோதிகொண்ட கார்கள்! விபத்தில் சிக்கிய பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ்!!


vijay-jesudasmeet-car-accident

பிரபல பின்னணி பாடகரான ஜேசுதாசின் மகன் விஜய் ஜேசுதாஸ். இவர் மலையாளத்தில் வெளியான மில்லினியம் ஸ்டார்ஸ் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

பின்னர் நடிப்பில் களமிறங்கிய அவர், தனுஷின் மாரி படத்தில் நடித்திருந்தார். பின்னர் படை வீரன் என்ற படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

Vijay jesudas

இந்தநிலையில் விஜய் ஜேசுதாஸ், கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள துரவூர் சந்திப்பு அருகே நேற்று இரவு 11மணியளவில் காரில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த காரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விஜய் ஜேசுதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் உயிர் தப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.