விஜய் அரசியலுக்கு வருவாரா?

விஜய் அரசியலுக்கு வருவாரா?


vijay-election

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் சர்க்கார். இந்த படத்தில் வில்லனாக பிரபல அரசியல்வாதி பழ.கருப்பையா நடித்து வருகிறார்.

கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சையை போல, அமெரிக்காவுக்கு சென்று, அங்கு இருக்கும் கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் என்பவராக நடிகர் விஜய் நடிக்கிறார்.

Latest tamil news

தமிழகத்தில் நடக்கும் அரசியல் கூத்துகளை தொடர்ந்து, தமிழகத்துக்கு வரும் சுந்தர், ஒரு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, பின், ஆட்சி பொறுப்புக்கு வருவது போல காட்சி அமைப்புகள் இடம்பெறுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகளை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் படம்  இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.