கடவுள் மட்டும் என் முன்னாடி வந்தா.. அதிரடியாக விஜய் ஆண்டனி போட்ட லிஸ்ட்.! வைரலாகும் பதிவு!!



Vijay antony twitter post viral

தமிழ் திரையுலகில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னனி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் விஜய் ஆண்டனி.  அதனை தொடர்ந்து அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து விஜய் ஆண்டனி சலீம், பிச்சைக்காரன்,சைத்தான்,எமன், திமிர் பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என பல கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து அசத்தலாக நடித்து வருகிறார். மேலும் இவரது கைவசம் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் என பல படங்கள் உள்ளன.

சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து பதிவுகளை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, தாழ்மையாக கேட்பேன். நீங்க என்ன கேப்பிங்க? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.