சினிமா

நடிகர் தனுஷுடன் ஜோடி சேர ஆசைப்படும் விஜய் பட நடிகை.! யார் அவர் தெரியுமா?

Summary:

Vijay actress malavika mohanan villing to act with dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாச வித்தியாசமான வேடத்தையும், கதைகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

மேலும் அண்மையில் வந்த இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கோலாகலமாக கொண்டாடினர். மேலும் இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் என தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதுமட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகன் நடிகர் தனுஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறி விட்டு.

அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது.

உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்  என பதிவிட்டு இருந்தார்.இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் நன்றி... விரைவில் நடக்கும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement