விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்.! வியப்பில் ரசிகர்கள்.!

விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்.! வியப்பில் ரசிகர்கள்.!vignesh sivan and Nayanthara blessed twins

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில், அவ்வப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை தங்களின் சமூகவலைதளபக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும்.என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிக்கு ரசிகர்கள் ,மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.