பக்கத்துல நயன்தாராவ வச்சுகிட்டு என்ன இப்படி சொல்லிட்டாரு?.. விக்னேஷ் சிவனை கலாய்த்துதள்ளும் ரசிகர்கள்..!!



Vignesh Shivan tweet about harathi photo

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக ஒரு ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்காக மொத்த ஹோட்டலையும் ஒரு வாரத்திற்கு வாடகை எடுத்தனர். 

திருமணத்தில் முக்கியமான பல பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் செல்போன், கேமரா என எதிலும் புகைப்படம் எடுக்ககூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

Vignesh Shivan tweet

இதற்கு காரணம் இவர்களது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றது தான். மேலும் இவர்களது திருமணத்திற்கு தமிழ் பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆகா திருமணம் என்ற திருமண சுற்று நடைபெற்று வருகிறது. அதில் நடிகை ஆரத்தி நயன்தாராவின் திருமண உடை லுக்கில் இருந்தார். 

Vignesh Shivan tweet

அந்த புகைப்படத்தை ஷேர் செய்த ஆரத்தி என்ன கொடுமை இது என்று கேப்ஷன் எழுதிய நிலையில், விக்னேஷ் சிவன் டிவிட்டரில் அவரை மென்ஷன் செய்து, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் ஆரத்தி" என்று கூறியுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் அருகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவ பக்கத்துல வச்சுகிட்டு விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு பாருங்க என்று கலாய்த்து வருகின்றனர்.