இதுக்குதான் வெயிட்டிங்.. அப்புறம் நயன்தாராவோடு கல்யாணம்தான்! சீக்ரெட்டை உடைத்த விக்னேஷ் சிவன்!!

இதுக்குதான் வெயிட்டிங்.. அப்புறம் நயன்தாராவோடு கல்யாணம்தான்! சீக்ரெட்டை உடைத்த விக்னேஷ் சிவன்!!



vignesh shivan talk about marriage with nayanthara

தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு நடிகர்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நயன்தாரா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அண்ணாத்த போன்ற திரைப்படங்கள் உள்ளன.

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வலையில் விழுந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் சிறந்த காதல் ஜோடியாக வலம் வரும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, ஒன்றாக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது என இருந்து வருகின்றனர்.

nayanthara

இந்நிலையில் ரசிகர்கள் எப்பொழுது இருவருக்கும் திருமணம் என தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர். விக்னேஷ் சிவன் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டே கேள்வி நேரம் என ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர் ஏன் இன்னும் நயன்தாராவை திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் மற்றவற்றிற்கு ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. முதலில் பணம் சேர்த்து விட்டு பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். கொரோனா போகட்டும் என்று காத்திருக்கிறோம் என கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.